தமிழ்நாடு

பழைய பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்: போக்குவரத்து துறை அறிவிப்பு!

Published

on

வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தி பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் பழைய பாஸ் பாஸ் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு ஒன்றையும் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏற்கனவே 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப் பட்ட நிலையில், வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய பஸ் பாஸ் அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஒருவேளை மாணவர்கள் பழைய பஸ் பாஸ் வைத்திருக்க வில்லை என்றால் பள்ளி சீருடை அணிந்தோ அல்லது பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்தோ இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து துறாஇ சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version