தமிழ்நாடு

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப் பொதுத்தேர்வு.. பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

Published

on

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9, 10, 11-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்-பாஸ் என்பதால் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து 10 வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் கூடுதல் மதிப்பெண் வேண்டும் என்று விரும்புபவர்கள், விருப்பம் இருந்தால் பொதுத்தேர்வு எழுதலாம். இந்த தேர்வின் அடிப்படையில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த பொதுத் தேர்வை எழுதாத மாணவர்கள் குறைந்த மதிப்பெண்ணை எடுத்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version