தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. 2023ஆம் ஆண்டின் தேர்வு தேதிகள் பட்டியல்

Published

on

2023 ஆம் ஆண்டில் நடத்தக்கூடிய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிபிடத்தக்கது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு தேர்வு அட்டவணையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் கலை அறிவியல் மற்றும் கல்வித் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

அதேபோல் இடைநிலை ஆசிரியருக்கு 6 ஆயிரத்து 553 பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில் மார்ச் மாதம் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் மே மாதம் எழுத்து தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3687 காலியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஜூன் மாதம் அறிவிப்பு வழிபடும் என்றும் செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும் என்றும் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version