தமிழ்நாடு

பொங்கல் பரிசுத்தொகை எதிரொலி! டாஸ்மாக் விற்பனை அமோகம்!!

Published

on

குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை அனைத்தும் டாஸ்மாக் கடைகளுக்கே தான் செல்கின்றன என்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக 2.06 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு, 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டு, தற்போது ரேஷன் கடைகளில் பரிசுத்தொகை ரூ.2,500 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பரிசுத்தொகை வழங்கப்பட்ட பிறகு டாஸ்மாக் விற்பனை அதிகரித்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. டாஸ்மாக்கில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 90 கோடி ரூபாய் விற்பனை என்றிருந்த நிலையில், தற்போது 115 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக பரிசுத்தொகை வழங்கப்பட்ட ஜனவரி 4 ஆம் தேதி அன்று டாஸ்மாக் விற்பனை 113.4 கோடி ரூபாயாக எகிறியது. அதனைத் தொடர்ந்து அதிகப்பட்சமாக தற்போது 115 கோடி ரூபாய் வரையில் விற்பனை களை கட்டுகிறது. தமிழகத்தில் வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட டாஸ்மாக் மூலமே அதிக வருமானம் கிடைக்கிறது.

Trending

Exit mobile version