தமிழ்நாடு

தமிழ்நாட்டில் காற்று வாங்கும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்!

Published

on

தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நீட் உள்ளிட்ட தேர்வுகள் எழுதி மருத்துவர்களாக மாணவர்கள் ஒரு பக்கம் கடுமையாகப் போட்டி வரும் நிலையில், இந்திய மருத்துவங்கள் ஆயுஷ் என அழைக்கப்படும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி போன்ற படிப்பில் சேர மாணவர்களுக்கு விருப்பம் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 1000 இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் காளியாக உள்ளது.

சென்ற ஆண்டு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் சேர 6000 நபர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது 5 ஆயிரத்துக்கும் குறைவாகச் சரிந்துள்ளது.

எனவே மாணவர்களிடம் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புகள் அதில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி பிரபலப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version