தமிழ்நாடு

இன்று பள்ளிகள் திறப்பு! 9 மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் வருகை!!

Published

on

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 12 மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பிறகு முழுக்க முழுக்க ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வந்தன.  கொரோனா வீரியம் குறைந்தாலும், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலா பெற்றோர், பள்ளிகள் திறக்கலாம் என்றே ஆமோதித்தனர்.

அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 10,12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்காக பள்ளிகள் முழுமையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் நலன் கருதி பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விவரங்கள் கடந்த ஞாயிறன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. மேலும், மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், சத்துமாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version