இந்தியா

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!

Published

on

சென்னை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில் சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, கோவை, இராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. கோவையில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.

கோவையில் இரவு முழுவதும் கனமழை பெய்து வீடுகளில் மழைநீர் புகுந்தததால் மக்கள் அவதியுற்றனர். மேலும் பல மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை இரவில் 4 மணிநேரம் கனத்த மழை பெய்யக்கூடும். எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் முடிந்தாலும், அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழைபெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்ப இந்த மாதம் தொடங்கியதில் இருந்தே ஆங்காங்கே மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version