தமிழ்நாடு

புத்தாண்டுக்கு நோ குடி, நோ கும்மாளம்.

Published

on

புத்தாண்டன்று குடித்துவிட்டு கும்மாளம் அடித்து பொதுமக்களுக்கு இடையூறாக இனி யாரும் செயல்பட முடியாத வகையில் காவல்துறையினர் கடும்  கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ள தமிழக அரசானது சென்னை மற்றும் முக்கிய பிற நகரங்களான திருச்சி, கோவை, மதுரை, சேலம், என மற்ற பெருநகரங்களிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிப்பு சிறப்புக் குழுவினை நியமித்து உள்ளது.

எனவே இக்குழுவானது வரும் 31-ம் தேதி மற்றும் 1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் மேற்குறிப்பிட்ட நகரில் கண்காணிப்பு பணிகளை போலீஸ் மூலம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சென்னை ஈ.சி.ஆர்.,ஓ.எம்.ஆர். சாலைகளில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கும் பணிகளும் அங்கு நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து அரசு விதிமுறைகளை மீறும் கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பைக் ரேஸ் நடத்த முடியாது.இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு செல்ல முடியாத படி காவல்துறை அதிகாரிகள் தக்க வியுகம் அமைத்துள்ளார்கள்.

seithichurul

Trending

Exit mobile version