வணிகம்

விரைவில் தமிழ்நாடு பேமென்ட்ஸ் பேங்க்.. என்ன சிறப்பு?

Published

on

நடந்த முடிந்த தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில், விரைவில் தமிழ்நாடு அரசு பேமென்ட்ஸ் வங்கியை விரைவில் தொடங்கும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்து இருந்தார்.

இப்போது தமிழ்நாடு அரசின் இந்த பேமென்ட்ஸ் வங்கிக்கு, விரைவில் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வணிக வங்கிகள் போன்று சிறிய அளவிலான வங்கி சேவையை பேமென்ட் வங்கி வழங்கும். வங்கி சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, ஃபிக்சட் டெபாசிட் போன்ற சேவைகளை பேமென்ட் வங்கிகள் வழங்கும். ஆனால் கடன் அல்லது கிரெடிட் கார்டு சேவைகளை வழங்க முடியாது.

கடன் திட்டங்களுக்குப் பதிலாக, அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் அரசின் டெபாசிட் திட்டங்கள் அல்லது பிற வங்கிகளில் பேமென்ட் வங்கிகள் தங்களது வங்கி டெபாசிட்களை செய்து, அதில் வரும் லாபத்தை தங்களது வாடிக்கையாளர்களுக்கு பேமென்ட் வங்கி பிரித்து வழங்கும்.

உதாரணத்திற்கு அரசின் டெபாசிட் திட்டம் ஒன்று 7 சதவீதம் லாபம் அளிக்கிறது என்றால், பேமென்ட் வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை அதில் முதலீடு செய்து, வரும் லாபத்தில் 1 அல்லது குறிப்பிட்ட சதவீதத்தை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்கும்.

பேமென்ட் வங்கி கணக்கில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இந்த டெபாசிட் தொகைக்கு வட்டியும் வழங்கப்படும்.

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி, ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பேமென்ட் வங்கி சேவையை வழங்கி வருகின்றன.

தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த பேமென்ட் வங்கி கணக்கு மூலம் பெற முடியும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version