தமிழ்நாடு

பணி நிரந்தரம் கோரி முதல்வர் வீட்டு முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

Published

on

பணி நிரந்தரம் கோரி முதல்வர் வீட்டு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆசிரியர்கள் படிப்பு முடித்தவர்களுக்கு போதுமான அளவில் வேலைவாய்ப்புகள் இல்லை. அந்தந்த அரசு பள்ளிகளில் தற்காலிகமாகவே பகுதி நேர ஆசிரியர்களை நியமித்துள்ளனர். மேலும், முதுநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும், அவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படவில்லை

இந்த நிலையில், இன்று காலை பகுதி நேர ஆசிரியர்களும், சான்றிதழ் பெற்ற முதுநிலை ஆசிரியர்களும் முதல்வர் வீட்டு முன்பு குவிந்தனர். அங்கு அவர்கள் தங்களுக்கு பணி நியமனம் வேண்டும், பணி நிரந்தரம் வேண்டும் என்று கோரி பதாகைகளை ஏந்தி வலியுறுத்தினர்.

முதல்வர் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும்  நிலையில், காவல்துறையினர், உயர்அதிகாரிகள் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முதல்வர் வீட்டு முன்பு ஆசிரியர்கள் கூடியதால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Trending

Exit mobile version