தமிழ்நாடு

தமிழகத்தின் புதிய ஆளுநர் ரவி ஷங்கர் பிரசாத் என தகவல்?

Published

on

தமிழகத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சரான ரவி ஷங்கர் பிராசத்தை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். தொடர்ந்து விரையில் தமிழகத்துக்கு புதிய ஆளுநர் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் விரைவில் தமிழகத்தின் புதிய ஆளுநர் ரவி ஷங்கர் பிரசாத் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அண்மையில் ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ரவி ஷங்கர் பிரசாத் ராஜினிமா செய்தார். எனவே இவர் தமிழகத்தின் அடுத்த ஆளுநராக வர அதிக வாய்ப்புகள் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version