தமிழ்நாடு

வரும் 27 முதல் லாரிகள் ஸ்டிரைக்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு?

Published

on

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னகேசவன், மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தனராஜ் உள்ளிட்டோர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கொரோனா காலத்திலும் லாரி டிரைவர்கள், தொழிலாளிகள் அரும்பாடுபட்டு வேலை செய்தனர்.

ஆனால் தற்போது புதிய விதிகள் என்ற பெயரில் அதிக அபராதங்கள் விதிக்கப்படுகிறது. எனவே, எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கு வெளிமாநில லாரி உரிமையாளர்களும், மற்ற அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன’. இவ்வாறு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

லாரிகள் ஸ்டிரைக்கால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும், இந்தப் பிரச்சனையை சுமூகமாக முடிக்கும் வகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன

Trending

Exit mobile version