தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று முதல் அமலுக்கு வரும் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Published

on

தமிழ்நாட்டில் இன்று காலை 6 மணி வரை நடைமுறையிலிருந்து வந்த ஊரடங்கு தளர்வுகள் முடிவுக்கு வந்த, கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே இன்று முதல் ஊரடங்கில் என்னவெல்லாம் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என்று விளக்கமாகப் பார்க்கலாம்.

எதற்கெல்லாம் அனுமதி?

1) புதுச்சேரி – தமிழ்நாடு இடையிலான பேருந்து சேவைகள் தொடக்கம்.
2) ஒன்றிய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேவுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இது குறித்து விவரங்களைத் தேர்வு நடத்தும் அமைப்புகள் மாவட்ட ஆட்சியர்களிடம் முன்னதாக தெரிவிக்க வேண்டும்.
3) உணவகங்கள், தேநீர்க் கடைகள், பேக்கரி, நடைபாதை கடைகள், இனிப்பு, கார வகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைக்கு உட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

கடைகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

1) கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சானிடைசர் வைத்து இருக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதனைக்குப் பின்பே கடைக்குள் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வெண்டும்.
2) கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
3) ஒரே நேரத்தில் அதிக வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4) குளிர் சாதன வசதி உள்ள கடைகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் கடைகள் செயல்படலாம்.
5) கடைகளில் வெளியில் மக்கள் வரிசையில் காத்திருக்கும் போதும் சமூக இடைவெளியைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

இதற்கெல்லாம் அனுமதி கிடையாது

1) புதுச்சேரி நீங்கலாகப் பிற மாநிலங்கள் இடையில் தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்குத் தடை தொடர்கிறது.
2) மத்திய விமான போக்குவரத்துத் திறை அனுமதி அளித்துள்ள வழித்தடங்களை தவிரப் பிற சர்வதேச விமான போக்குவரத்துக்குத் தடை.
3) மதுக்கூடங்கள், நீச்சல் குளங்களுக்குத் தடை தொடரும்.
4) பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது.
5) பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை.
6) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது.
7) உயிரியல் பூங்காக்கள் திறக்க தடை.
8) திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி.
9) இறுதிச்சடங்கில் 20 நபர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்த ஊரடங்கு 19/07/2021 காலை 6 மணி வரை தொடரும்.

seithichurul

Trending

Exit mobile version