தமிழ்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் கனமழை!

Published

on

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் பகுதி அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால்,  நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் மிககனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

நெல்லையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அணைகள் திறக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றிரவு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீங்கும் பட்சத்தில், கனமழை படிப்படியாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை என்பதால் நெல்லை மக்கள் வெளியே செல்ல முடியாமல் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு முன்னரே மழை ஒய்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version