தமிழ்நாடு

9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Published

on

அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை முடிந்த பிறகும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே மழை பெய்து கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிககனமழையும், மற்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. நெல்லையில் கனமழை காரணமாக தாமிரபரணி மற்றும் மணிமுத்தாறு ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.  தாமிரபரணி ஆற்றின் கடைசி கதவணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை நிரம்பி வினாடிக்கு 6௦௦௦ கன அடி தண்ணீர் கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கும் மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,  இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும். இராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். குமரி போன்ற கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version