தமிழ்நாடு

‘நம்பாதீங்க.. நம்பாதீங்க.. இத நம்பாதீங்க..’ தடுப்பூசி குறித்து சுகாதாரத்துறை செயலர் பேட்டி

Published

on

கொரோனா தடுப்பூசியைப் பற்றி பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில், சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் செயலர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘ தமிழகத்தில் தற்போது 5 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகளை மக்களுக்கு போடுவதற்காக சுமார் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.  சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என முதலில் ஜனவரி 25-ஆம் தேதி வரை பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.  அதன்பிறகு படிப்படியாக மற்றவர்களுக்கும் போடப்படும்.

தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் கொரோனா குறைந்தநிலையில் மற்ற இடங்களில் உருமாறிய கொரோனா ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தமிழகத்தைப் பொறுத்தவரையில் உருமாறிய கொரோனாவால் எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போது நான்கு பேர் மட்டுமே அதனால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களும் குணமடைந்து வருகின்றனர்’ இவ்வாறு தெரிவித்தார்.

Trending

Exit mobile version