தமிழ்நாடு

மாநகராட்சி ஆனது தாம்பரம்: அரசாணை வெளியீடு!

Published

on

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த நிலையில் சற்றுமுன் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பின்படி தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான பணிகள், வரைபடம் தயாரிக்கும் பணி உள்பட அனைத்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி தாம்பரம் மாநகராட்சிக்கான ஆவணங்கள், எல்லைகளை வரையறுக்கும் வரைபடம் ஆகிய பணிகள் முடிவடைந்தன. இந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய ஐந்து நகராட்சிகள் இணைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, திருநீர்மலை, பேரூராட்சிகளையும் தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தற்போது தாம்பரம் நகராட்சி பரப்பளவு என்பது 87.64 சதுர கிலோமீட்டர் என்று உள்ளது என்பதும் 9.6 லட்சம் மக்கள் தொகை இந்த மாநகராட்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் மக்களின் நீண்டகால கனவான மாநகராட்சி என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணை அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version