தமிழ்நாடு

SC/ST சமூகத்தினர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தமிழக அரசு முதலீடு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Published

on

SC/ST சமூகத்தினர் ஆரம்பித்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரூபாய் 7.5 கோடி முதலீடு செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் அவர் 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 7.5 கோடி முதலீடு செய்வதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொழில் செய்பவர்களை குறிப்பாக எஸ்சி எஸ்டி இனத்தினர் செய்யும் தொழிலுக்கு தமிழ்நாடு அரசு முதலீடு செய்து ஆதரவளித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

பட்டியலினம் மற்றும் பழங்குடியின பிரிவுகளை சார்ந்த தொழில் முனைவோருக்கு கடனாக நிதி வழங்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது, இந்த திட்டத்தில் பயன்பெற கடந்த ஆண்டு மே மாதம் தொழில் முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இதுவரை 330 நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் முதல் கட்டமாக 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்நிறுவனங்களுக்கு 7.5 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஆணையை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று வழங்கி உள்ளார். இதேபோன்று இன்னும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தமிழக அரசு முதலீடு செய்யும் இன்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

தமிழக அரசு முதலீடு செய்த ஐந்து நிறுவனங்கள் இதுதான்:

1. பேக் என் பேக் (Pack N Back) நிறுவனம்

2. யூனிபோஸ் (Unibose) நிறுவனம்:

3. டவ் மேன் (Tow Man) நிறுவனம்

4. எக்கோ சாப்ட் சொல்யூசன்ஸ் (Eco Soft Solutions) நிறுவனம்:

5. பீஸ் ஆட்டோமோசன் (Peas Automation) நிறுவனம்:

 

seithichurul

Trending

Exit mobile version