தமிழ்நாடு

முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Published

on

முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வருமான வரம்பு உயர்வு ஏழை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமான 72,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என இருந்து வந்தது. அதை உயர்த்த வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இப்போது அந்த வருமான வரம்பை 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெரும் பயனாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்து தரப்படும்.

இதைப் பயன்படுத்து ஏழை மக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள முடியும்.

இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை உட்பட 1007 அறுவை சிகிச்சைகளை இலவசமாகச் செய்துகொள்ள முடியும்.

முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் இந்த வருமான வரம்பு உயர்வு என்பது திங்கட்கிழமை (20/12/2021) முதல் அமலுக்கு வருவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மேலும் பல லட்சம் ஏழைக் குடும்பங்கள் மருத்துவச் சிகிச்சைகளை இலவசமாகப் பெற்று பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version