தமிழ்நாடு

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை ஏன்? தமிழக அரசு விளக்கம்!

Published

on

தமிழக அரசு 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்த தடை ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, ‘தற்கொலைக்கு காரணமான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எலிகளை கொல்லும் உயிர்க்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் நினைவு கூர்ந்தார். இந்த நிலையில் 3% மஞ்சள் பாஸ்பரஸ் உட்பொருளை கொண்ட எலி மருந்து நிரந்தரமாக தடை செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தடை விதிக்கப்பட்ட பொருளின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த மருந்துகளை வாகனத்தில் எடுத்து செல்லவும் ஆன்லைனில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆறு மருந்துகளும் 60 நாட்களுக்கு வேளாண் துறை மூலம் தடை விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அதை மேலும் 30 நாட்கள் நீடிக்க விதிகளில் இடம் உண்டு என்பதால் மேலும் ஒரு மாதம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். மேலும் மத்திய அரசின் மூலம் அனுமதி பெற்று இந்த ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளை நிரந்தரமாக தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு எலிகலை கொல்லும் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது குறித்து கடிதம் எழுதப்படும் என்றும் தடையை மீறி இ-காமர்ஸ் நிறுவனங்கள் பூச்சிக்கொல்லியை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக அரசு தடை செய்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளின் பெயர்கள் இதோ:

monocroptophos

profenophos

cephate

profenophos+ cypermethrin

chlorpyriphos+ cypermethrin

chlorphyriphos

 

seithichurul

Trending

Exit mobile version