தமிழ்நாடு

தமிழக ஆளுனர் மாற்றமா? பீட்டர் அல்போன்ஸ் கூறும் ஆலோசனை!

Published

on

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நேற்று டெல்லி சென்ற நிலையில் இன்று அவர் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து ஆளுனரையும் மாற்ற வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் டெல்லி வட்டாரங்களில் இருந்து கடந்த சில நாட்களாக தகவல்கள் கசிந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் தமிழகத்தில் ஆளுநர் மாற்றப்படுகிறாரா? அவ்வாறு மாற்றப்பட்டால் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திப்பது ஆளுநர் மாற்றம் பற்றிய யூகங்களை எழுப்பி உள்ளது என்றும், அது உண்மையாக இருந்தால் புதிய ஆளுநர் நியமனம் பற்றி பிரதமரும், உள்துறை அமைச்சரும் முதலமைச்சரிடம் ஆலோசித்த பின்னரே நியமனம் செய்ய வேண்டும் என்றும், அதுதான் கூட்டாட்சியின் தத்துவம் என்றும் தெரிவித்துள்ளார்

பீட்டர் அல்போன்ஸ் கருத்தை அடுத்து ஆளுநர் மாற்றம் ஏற்பட்டால் முதலமைச்சரிடம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆலோசனை செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Trending

Exit mobile version