தமிழ்நாடு

டெல்லி தலைவர்களுடன் ஆளுனர் கே.என்.ரவி சந்திப்பு: திமுக அரசுக்கு குடைச்சலா?

Published

on

பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களை தமிழக ஆளுநர் கேஎன் ரவி அவர்கள் சந்தித்திருப்பது திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கவா? என்று அரசியல் வல்லுனர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற தமிழக ஆளுநர் கேஎன் ரவி அவர்கள் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆகியோரை சந்தித்த நிலையில் சற்று முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் கவர்னராக இருந்த கிரண்பேடி அவர்கள் அம்மாநில முதல்வருக்கு குடைச்சல் கொடுத்ததாக கூறப்பட்டது போல் திமுக அரசுக்கு ஆளுனர் கேஎன் ரவி நெருக்கடி கொடுப்பதற்காக நியமனம் செய்யப்பட்டார் என அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில் தற்போது அவர் பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆளுநர் கேஎன் ரவி தரப்பிலிருந்து கூறப்பட்டதாகவும் இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ஆளுனருக்கு தங்களது கண்டத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தின் கிரண்பேடியாக ஆளுநர் கேஎன் ரவி மாறுவாரா? திமுக அரசு அவரது நடவடிக்கைகளை சமாளிக்க போவது எப்படி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version