தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் ஆதரவு!

Published

on

பள்ளிகளைத் திறப்பது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் ஆதரவு அளித்துள்ளதாக பள்ளிகல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியுள்ளார்.

பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிகல்வித் துறை சார்பில்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதில் மாணவர்கள் நலனும், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் அடங்கி இருப்பதால் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த நவம்பர் மாதம் நடந்த கருத்துக்கணிப்பில், பெற்றோர்கள் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தினசரி இறப்பு விகிதமும் சரிந்து வருகிறது. எனவே அரசு சார்பில் இன்றும் நாளையும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகணிப்பு நடத்தப்படும். அதன் பிறகே அரசு சார்பில் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது, ‘இன்று மற்றும் நாளை மாலை வரை பெற்றோர்களிடம் இருந்து கருத்துகள் கேட்கப்படும். பாதுகாப்பான முறையில் பள்ளிகள் நடத்துவது குறித்து உயர் மட்ட குழுவுடனும், மருத்துவ குழுவுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும். பெரும்பாலும் இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புள்ளது’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த  ஜூன் மாதம் நோய்த்தொற்று தீவிரமடைந்த நிலையில் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகவும் அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில தனியார் பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version