தமிழ்நாடு

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்.. விண்ணப்பிப்பது எப்படி?

Published

on

சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த இலவச தையல் இயந்திரத்தைச் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பித்துப் பெறலாம்.

இந்த தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பவர்கள் வயது 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தையல் கலை பயின்றதற்காகச் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்.

கணவரால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் கீழே இணைப்பில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்: https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Application-form-for-the-free-supply-of-Sewing-Machines.pdf

இலவச தையல் இயந்திரம் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

1) வயதுச் சானிற்தழ்
2) இருப்பிடச் சான்றிதழ்
3) வருமானச் சான்றிதழ் (ஆண்டு வருமானம் 12,000 ரூபாய்க்கும் கீழ் என குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்)
4) அனுபவ சான்று
5) சாதி சான்றிதழ்
6) உடல் ஊனமுற்றோர் சான்றிதழ்
7) கணவனால் கைவிடப்பட்ட அல்லது உதவி சான்றிதழ்
8) ஆதார் அட்டை நகல்
9) அலைப்பேசி எண்
10) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
11) கையொப்பம் இடப்பட்ட விண்ணப்பம்

முக்கிய விதிகள்

1) விண்ணப்பிக்கும் நபர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்
2) முகவரி தமிழ்நாடு வீட்டு முகவரியாக இருக்க வேண்டும்.
3) ஆண்டு வருமானம் 12,000 ரூபாய் என வருமான சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.
4) தையல் கலை பயின்றதற்காகச் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்

seithichurul

Trending

Exit mobile version