தமிழ்நாடு

தமிழகத்தில் ஜன.31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு! பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

Published

on

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றோடு (டிச. 31) முடிவடையும் நிலையில், ஜனவரி 31 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31 ஆம் தேதியோடு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குள்ளாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் வந்துவிட்டது. இது பழைய கொரோனா வைரஸை விட வேகமாக பரவும் அபாயம் கொண்டது.

இந்த நிலையில், இன்றோடு (டிச.31) முடிவடைவதாக இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி வரையில் சில கட்டுப்பாடுகளுடனையே பொது சேவைகள், பொது இடங்களில் மக்கள் அனுமதிக்கப்படுவர்.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற இடங்களில் களைக்கட்டும். ஆனால், தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கலுக்கும் இதே தடை உத்தரவு தொடர்கிறது.

முக்கிய தளர்வுகள்:

திரைத்துறை பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. முன்னதாக 50% பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதே போல் வழிபாட்டு தலங்களில் எல்லா நேரங்களிலும் பூஜைகள், பிராத்தனைகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version