தமிழ்நாடு

இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை: சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்., இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே ஒரு சில கடிதங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 47 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது அந்த 47 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .

நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 47 மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின் அவர்கள் தனி வாகனங்களில் அவர்களுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல் இலங்கை சிறையில் வாடும் மற்ற மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version