தமிழ்நாடு

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு: வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகள்!

Published

on

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை இன்று இலங்கை அரசு ஏலம் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக மீனவர்கள் தரப்பினர் அதிருப்தியை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை பிப்ரவரி 7ஆம் தேதி ஏலம் விடப்படும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து உடனடியாக மத்திய மாநில அரசுகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஏலத்தை தடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. ஆனால் மத்திய மாநில அரசுகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து இன்று இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்பட்ட கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் காரைநகர் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 65 படகுகள் இன்று ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் ஏலத்தில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 105 விசைப்படகுகள் ஏலம் விடப்படும் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக மத்திய மாநில அரசுகள் ஏலத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version