தமிழ்நாடு

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்பு எதிரொலி.. விற்பனை அதிகரிப்பு!

Published

on

தமிழகத்தில் பெட்ரோல் மீதான விலை குறைக்கப்பட்டதை அடுத்து 11.21 லட்சம் லிட்டர் வரை விற்பனை அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை 5 ரூபாய் வரையில் குறைக்கப்படும் என திமுக தெரிவித்து இருந்தது. அதற்கான அறிவிப்பை 2021-2022 திருத்தப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அறிவித்தனர்.

பெட்ரோல் விலை 100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. பட்ஜெட்டில் 3 ரூபாய் வரை பெட்ரோல் விலையை குறைத்து தமிழக அரசு அறிவித்தது. எனவே சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பெட்ரோல் விலை குறைப்பால் தமிழக அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜ கூறியிருந்தார்.

டீசல் விலை ஏன் குறைக்கப்படவில்லை?

petrol price high, oil companies, petrol price, diesel price, பெட்ரோல் விலை உயர்வு, எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலை என்ன, டீசல் விலை உயர்வு

பெட்ரோ விலையைக் குறைத்தால் பயனாளிகள் நேரடியாகப் பயனடைவார்கள். டீசல் விலை குறைத்தால் டீசல் கார் வைத்துள்ளவர்களுக்குத் தான் பயன் தரும். லாரி, பேருந்து உள்ளிட்ட தளவாடங்கள் துறையில் டீசல் வாகனங்கள் அதிகம் இருந்தாலும் அவை நேரடியாக மக்களுக்குப் பயன் அளிக்காது. விலை குறைக்கப்பட்டாலும் அதி பயனாளிகளுக்குச் சென்று சேருமா என்பது சந்தேகமே. எனவேதான் டீசல் மீதான விலையைக் குறைக்கமுடியவில்லை என்றும் நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version