தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகிறதா? உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் திடீர் மனு!

Published

on

தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திடீரென மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் 4 ஆம் தேதி ஆகிவிட்ட போதிலும் இன்னும் தேர்தல் அறிவிப்பு கூட வெளிவரவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆறு மாத காலம் அவகாசம் கேட்டு உள்ள நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் இந்த கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான நிலைப்பாட்டை ஏற்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

மற்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் கூட நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மட்டும் தேர்தல் ஆணையத்திற்கு என்ன சிக்கல் என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எழுப்பி இருந்தது.

இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் இந்த மனுவுக்கு உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version