Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாடு நாள் தேதி மாற்றம்: திமுக அரசு அதிரடி அறிவிப்பு!

Published

on

கடந்த அதிமுக ஆட்சியில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு நாள் தேதி மாற்றப்பட்டதாக திமுக அரசு அறிவித்துள்ளது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக முந்தைய அதிமுக அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அது முதல் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை கவனமாக பரிசீலித்து இனிமேல் ஜூலை 18ஆம் தேதி தான் தமிழ்நாடு நாள் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என அறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்றும் இது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும், தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்ற நிலையில் ‘தமிழ்நாடு’ என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன என்பதும், இதற்காக, சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்னரே மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் தேதி தமிழ்நாடு என்று அன்றைய முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களால் மாற்றப்பட்டது. இதனையடுத்தே தற்போது ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!