தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடக்கம்.. மத்திய சுகாதார அமைச்சர் ஆய்வு

Published

on

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை 5 இடங்களில் நடைபெற்றது. மருத்துவர்கள், செவலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவருக்கும் போடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக இன்று 38 மாவட்டங்களில்  கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சென்னை அரசு மருத்துவமனைகளில் நேரில் சென்று தடுப்பூசி ஒத்திகளைப் பார்வையிட்டார்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் இந்தாண்டு இறுதிக்குள் 20% பேருக்கு, அதாவது சுமார் 1.6 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றாலும், இதனை போட்டுக்கொள்வதற்கு மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.

Trending

Exit mobile version