தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு! மீண்டும் கட்டுப்பாடுகள்?

Published

on

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று திடீரென அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று மட்டும் 60 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் 72 பேரும், கோவையில் 59 பேரும், திருப்பூரில் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை மாவட்டங்களில் ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரம்பலூரில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

705 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். அதிகபட்சமாக சென்னையில் 189 பேரும், கோவையில் 60 பேரும், செங்கல்பட்டில் 50 பேரும் மீண்டுள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் சுமார் 8 லட்சத்து 15 ஆயிரத்து 516 பேர் கொரோனாவில் குணமடைந்து உள்ளனர்.

இதற்கு முந்தைய நாட்களை ஒப்பிடுகையில், நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version