தமிழ்நாடு

ஒலிம்பிக் பாய்மர போட்டியில் பங்கேற்கும் தமிழக கல்லூரி மாணவி: குவியும் வாழ்த்துக்கள்

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் இந்தியாவின் வீரர்கள் வீராங்கனைகள் உள்பட பல நாடுகளிலிருந்து கலந்து கொள்வார்கள் என்பதும் உலகம் முழுவதும் இந்த போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக கலந்துகொள்ளும் இந்திய வீராங்கனை அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி குறித்த தகவல் தற்போது வெளிவந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் பாய்மர போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேத்ரா குமணன் என்பவர் தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவில் இருந்து பாய்மர போட்டியில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் முதல் வீராங்கனை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக மாணவி நேத்ரா குமரன் அவர்கள் தங்கப்பதக்கத்தை வென்று வரவேண்டுமென்று நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version