தமிழ்நாடு

டெல்லி பள்ளிகள் போல் தமிழகத்திலும் பள்ளிகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

Published

on

டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகள் போல் தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப் போகிறோம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

கடந்த சில ஆண்டுகளாக டெல்லி மாநில அரசால் உருவாக்கப்பட்ட மாதிரி பள்ளிகளுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நான்கு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகளை பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, ‘டெல்லி மாதிரி பள்ளி போல தமிழ்நாட்டிலும் பள்ளிகளை உருவாக்க போகிறோம். எல்லா துறையை போல கல்வி மருத்துவத்திற்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறுகிறார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை திரும்பியவுடன் மாதிரி பள்ளிகள் அமைப்பது குறித்த ஆலோசனைகயில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version