சினிமா செய்திகள்

‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பாராட்டிய தமிழக முதல்வர்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

போனி கபூர் தயாரிப்பில், உதயநிதி நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’.

பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 13 என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படம் வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை லிசிக்கு சொந்தமான பிரிவியூ திரையரங்கில் நேற்று இந்த படம் திரையிடப்பட்டபோது தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தயாரிப்பாளர் போனி கபூர் உள்பட பல பிரபலங்கள் பார்த்தனர்.

தமிழக முதல்வர் இந்த படத்தை பார்த்து உதயநிதி உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

போனிகபூருக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version