தமிழ்நாடு

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. கிடைத்த முதலீடு எவ்வளவு தெரியுமா?

Published

on

மார்ச் 24-ம் தேதி நான்கு நாட்கள் அரசு முறை பயணமாகத் துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

துபாய் சுற்றுப் பயணத்தின் போது அங்கு நடைபெற்று உலக பொருட்காட்சியில் தமிழகத்தின் பெருமை, வணிகங்களை விளம்பரப்படுத்தும் அரங்கைத் திறந்து வைத்தார்.

இந்த பயணம் துபாயிலிருந்து முதலீடுகளை ஈர்க்க எனக் கூறப்பட்ட நிலையில், 6 முக்கிய நிறுவனங்களுடன் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாகத் தமிழ்நாட்டில் 14,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த சுற்றுப்பயணத்தில் அவர் குடும்ப உறுப்பினர்கள் சென்ற நிலையில், இது அரசு முறை பயணமா இல்லை குடும்பச் சுற்றுலாவா என கேள்வி சர்ச்சை எழுந்தது.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க துபாய் செல்லவில்லை. தமிழ்நாட்டிலிருந்து 5,000 கோடி ரூபாய் பணத்தைத் துபாய் சென்றுள்ளார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார்.

அந்த விமர்சனத்துக்குப் பதி அளித்த மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இருந்து நான் பணம் கொண்டு வரவில்லை, தமிழ்நாட்டு மக்கலின் மனத்தைத்தான் கொண்டு வந்தேன் என திங்கட்கிழமை அபுதாபியில் தமிழ் மக்களிடையில் ஆற்றிய உரையில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version