தமிழ்நாடு

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்!

Published

on

தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடு துறை உதயமாகியுள்ளது. முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலமாக நிர்வாக பணிகளை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், 5 மாவட்டங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டது. நெல்லையில் இருந்து தென்காசி, வேலூரில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிபேட்டை, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு என பெரிய மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன.

அந்த வரிசையில் தற்போது 38 ஆவது மாவட்டமாக, நாகையில் இருந்து மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாவட்ட நிர்வாக பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்யும் பணிக்காக ஐபிஎஸ் அதிகாரி லதா நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய மாவட்ட நிர்வாகப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதற்கும், அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறைக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version