தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று கிட்டத்தட்ட ஆறாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் நாளை மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூத்த அமைச்சர்கள் உள்பட ஒரு சிலர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.

இந்த ஆலோசனையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் நடவடிக்கை எடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகவும் இரவு நேர ஊரடங்கு உள்பட ஒரு சில அதிரடி நடவடிக்கைகள் நாளை ஆலோசனை முடிந்த பிறகு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை கையை மீறி விடும் என்றும் இன்னொரு மகாராஷ்டிரா மாநிலம் ஆக மாறிவிடும் என்றும் மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version