தமிழ்நாடு

நீட் தேர்வில் வெற்றி பெற்று வெண்டைக்காய் பறித்த மாணவிக்கு பாஜக உதவி!

Published

on

நீட் தேர்வில் வெற்றி பெற்றும், மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் பணவசதி இல்லாததால் வெண்டைக்காய் பறித்து வந்த மாணவி குறித்த செய்தி நேற்று வெளியான நிலையில் அந்த மாணவிக்கு தமிழக பாஜக உதவி செய்ய முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த தங்கப்பேச்சி என்ற மாணவி வீட்டின் பொருளாதார சூழல் காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலையில் இருந்தார்.மேலும் அவர் தனது ஊரில் வெண்டைக்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த செய்தி ஊடகங்களில் பரவியதை அந்த மாணவிக்கு உதவ முன்வரவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் சகோதரி தங்கப்பேச்சி நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த நிலையில் அவரது கனவை நிறைவேற்ற பாஜக முன்வந்துள்ளதாகவும் தமிழக பாஜகவை சேர்ந்த மதுரை குழுவினர் அவரை தொடர்பு கொண்டு அவர் டாக்டர் படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய உள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் தங்குமிடம் சாப்பாடு உள்ளிட்டவைகளுக்கு பணவசதி இல்லாததால் மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியவில்லை என்று தங்கப்பேச்சி கூறிய நிலையில் அவருடைய செலவுகள் அனைத்தையும் தமிழக பாஜக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழக பாஜகவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அனிதாவின் மருத்துவ படிப்புக்கு ஏற்ற தொகையை யாராவது ஏற்று கொண்டிருந்தால் அவரது உயிர் பலியாகியிருக்காது என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version