இந்தியா

2021ல் வரலாறு காணாத இறப்பு சதவீதம்: தமிழக பிறப்பு-இறப்பு புள்ளி விபரங்கள்!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சென்சஸ் எடுக்கப்படும் என்பதும் கடந்த 2011ம் ஆண்டு சென்சஸ்படி 7 கோடியே 21 லட்சம் மக்கள்தொகை தமிழகத்தில் இருந்தனர் என்பதும் 2021 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக சென்சஸ் எடுக்கவில்லை என்றாலும் தற்போது 8 கோடியை விட அதிகமாக தமிழகத்தில் மக்கள் தொகை இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பிறப்பு இறப்பு குறித்த கணக்கெடுப்பு புள்ளி விவரங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான சதவீதம் மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அதாவது 2018 முதல் 2020 வரை 35 முதல் 40 சதவீதம் வரை பிறப்பு இறப்பு சதவீத இடைவெளி இருந்தது. அதாவது பிறப்பு சதவிகித்தை விட இறப்பு சதவீதம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2021 ஆம் ஆண்டில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான சதவீதம் வெறும் 3.69 என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் இந்த 2021 ஆம் ஆண்டு தான் அதிக அளவில் இறப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

2021 ஆம் ஆண்டில் 9,02,367 பேர் பிறந்துள்ளதாகவும், 2021ஆம் ஆண்டில் 8,70,192 பேர்கள் இறந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் உள்பட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கடந்த ஆண்டு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version