தமிழ்நாடு

கொரோனா பரவல் எதிரொலி: தேர்தல் அட்டவணையில் மாற்றமா?

Published

on

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது குறித்து இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் கூறும்போது ’தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் தேர்தல் அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் கூறினார்

ஆனால் அதே நேரத்தில் கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா பாதித்த வேட்பாளர்கள் கவச உடை அணிந்து வாக்களிக்கலாம் என்றும் கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறிய அவர் இதுவரை 7 ஆயிரத்து 655 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அதில் 4512 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 2743 வேட்புமனுக்கள் நிராகரிப்பு என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழ்கத்தில் 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர் என்றும், ஆண் வாக்காளர்கள் 3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர் என்றும், பெண் வாக்காளர்கள்-3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் என்றும், ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version