தமிழ்நாடு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. முதல் நாளே, அதுவும் தமிழ் மொழி தேர்வுக்கே 50 ஆயிரம் பேர் ஆப்செண்ட்!

Published

on

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கப்பட்ட நிலையில், முதல் நாளே, அதுவும் தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 8.51 லட்சம் நபர்கள் விண்ணப்பித்த நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற முதல் மொழி தேர்வை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், 4 முதல் 5 சதவிகிதம் மாணவர்கள் பொதுத் தேர்வுகள் எழுதாமல் ஆப்செண்ட் ஆவது வழக்கமான ஒன்றுதான். தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக மாநில பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

அடுத்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்ச் 15-ம் தேதி) ஆங்கில மொழி தேர்வு நடைபெற உள்ளது.

ஏப்ரல் 3-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 21-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளது.

2023-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version