தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

Published

on

அரசு பள்ளி, அரசு உதவி பெறும் மாணவர்கள் பழைய பாஸ் மூலமாகவே பேருந்தில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், நாளை முதல் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் செல்லுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், பஸ் பாஸ் குறித்து போக்குவரத்துத்துறை எம்ஆர் விஜயபாஸ்கர் செய்தி வெளியிட்டுள்ளார். அதன்படி, மாணவர்கள் பள்ளி சீருடையும், கடந்தாண்டு பஸ் பாஸ் அட்டையும் வைத்திருந்தாலே போதும். அதன் மூலமாக பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version