தமிழ்நாடு

அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம்: முதல்வர் அறிவிப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் 100% தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தமிழக இளைஞர்களை தவிர பிற மாநில இளைஞர்கள் அதிக அளவில் அரசு பணிகளில் இடம்பெற்று வருவதை அடுத்து தமிழ்மொழித் தாள் கட்டாயம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

அவ்வாறு தமிழ்மொழித் தாள் கட்டாயம் வைத்தால் கண்டிப்பாக தமிழக இளைஞர்களுக்கு 100% வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆட்சி காலங்களில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் திமுக ஆட்சி வந்தால் கண்டிப்பாக தமிழக அரசு பணி நியமனங்களில் உள்ள போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் என்றும் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பணி நியமனங்களில் தமிழ்மொழித் தாள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ் மொழி தெரியாதவர்கள் அரசு பணிகளில் ஈடுபடும் போது மக்கள் அவரிடம் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படும் என்ற நிலை இனி இருக்காது என்றும், தமிழ் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அரசு பணிகளில் பணிபுரிந்தால் எளிதில் மக்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version