சினிமா செய்திகள்

கிளியால் வந்த வினை.. நடிகர் ரோபோ ஷங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த வனத்துறையினர்!

Published

on

காமெடி நடிகர் ரோபோ ஷங்கருக்கு வீட்டில் இரண்டு பச்சைக் கிளிகளை வைத்திருந்த காரணத்துக்காகத் திங்கட்கிழமை 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்ப் நடிகர் ரோபா ஷங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் இரண்டு கிளிகள் இருந்தன.

robo shankar dance

அந்த வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து ரோபா ஷங்கர் வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர், அவற்றைப் பறிமுதல் செய்து கிண்டி சிறுவர்கள் பூங்காவில் ஒப்படைத்தனர்.

மேலும் வனத்துறையினரிடம் இருந்து முறையான அனுமதி பெறாமல் வீட்டில் பச்சைக் கிளியைக் கூண்டில் அடைத்து வைத்து வளர்த்த காரணமாக வருக்கு 2.5 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவருக்கு இந்த கிளிகள் எப்படி வந்தது எனவும் வனத்துறையினர் விசாரணை நடித்து வருகிறார்கள்.

இந்திய வனவிலங்கு சட்டம், 1972-ன் கீழ் இந்தியாவில் கிளிகளை வீட்டில் கூண்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த விதியை மீறுபவர்களுக்கு 3 வருடம் சிறைத் தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படும் எனபது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version