தமிழ்நாடு

பிராமணர்கள் இருபிறப்பாளர்கள், அவர்கள் தலைமை பொறுப்பில் தான் இருக்க வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி!

Published

on

தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு கேரள மாநிலம் கொச்சியில் ஜூலை 19 முதல் 21 வரை நடந்தது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் இந்திய நாட்டுக்கான வெளிநாட்டு தூதர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்கள். இது தற்போது சர்ச்சைக்குறிய ஒன்றாக உருவாகியுள்ளது.

கொச்சியில் நடைபெற்ற இந்த தமிழ் பிராமணர்களின் உலக மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் மற்றும் நெதர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதர் வேணு ராஜமோனி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

குறிப்பாக இதில் கலந்துகொண்டு பேசிய கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி சிதம்பரேஷ், பிராமணர்கள் இருபிறப்பாளர்கள். அவர்கள் தலைமை பொறுப்பில் தான் இருக்க வேண்டும். சாதிவாரி இடஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்காக போராட முன்வர வேண்டும் என கூறியுள்ளார். ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியே தனது சாதியின் நலனுக்காக பகிரங்கமாக பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் உயர் பதவிகள் மற்றும் அரசியல் சாசன பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஒரு சாதி மாநாட்டில் கலந்துகொண்டு பேசுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதில் அவர்கள் கூறிய கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராமணர்கள் தலைமை பொறுப்பில் தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளது விவகாரமாக மாறியுள்ளது.

Trending

Exit mobile version