சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 4 தொலைக்காட்சியில் எப்போது தெரியுமா?

Published

on

பிக்பாஸ் சீசன் 4 தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்கள் முடிந்து வெற்றிகரமாக 4வது சீசனில் அடியெடுத்து வைக்கின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள், சர்ச்சைகள் இருந்தாலும் பெரிய ரசிகர் கூட்டம் எப்போதும் உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 27-ம் தேதி தமிழ் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தற்போது புதிய தகவல் என்னவென்றால் இரண்டாவது ப்ரோமோ இந்த வார இறுதியில் வெளியாக உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி அக்டோபார் 4ம் தேதி முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பாகும் என்ற தகவல் ரடிகர்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அன்று போட்டியாளர்கள் அறிமுக நிகழ்வு முன்பு போல இல்லாமல் எளிமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version