சினிமா செய்திகள்

வியட்னமீஸ் திரைப்படத்தில் இரு பெரும் தமிழ் திரை கலைஞர்கள்..!

Published

on

கோலிவு ஸ்டன்ட் இயக்குநரான பீட்டர் ஹெய்ன் வியட்நாம் திரைப்படம் ஒன்றின் மூலம் முதன்முறையாக திரை இயக்குநர் ஆகியுள்ளார்.

இந்த வியட்நாம் மொழி படத்துக்காக தமிழ் இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் இசை அமைக்க உள்ளார். வியட்நாம் மொழியில் தயாராகி வரும் இந்த கோலிவுட் கலைஞர்களின் திரைப்படத்துக்கு ’சாம் ஹோய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கதை நாயகர், நாயகிகள் அனைவரும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள்தான்.

இத்திரைப்படம் வருகிற ஜனவரி 21, 2021 அன்று வியட்நாம், சீனா ஆகிய நாடுகளில் வெளியாக உள்ளது. பீட்டர் ஹெய்ன் இத்திரைப்படத்தை விரைவில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

Trending

Exit mobile version