தமிழ்நாடு

இன்னும் சிறிது நேரத்தில் 11 மாவட்டங்களில் இடிமின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு!

Published

on

இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

வளிமண்டல அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தர்மபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை இன்னும் ஒரு சில மணி நேரத்தில் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

அதேபோல் நாளை கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், ராமநாதபுரம், தர்மபுரி, திருநெல்வேலி, கன்னியாகும,ரி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

ஏப்ரல் 30 மற்றும் மே ஒன்றாம் தேதி தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் மீனவர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் இல்லை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version