தமிழ்நாடு

தாம்பரம் – செங்கல்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு மத்திய அரசு காரணமா?

Published

on

தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில் அதனை நீக்குவதற்காக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார் .

ஒவ்வொரு பண்டிகையின் போது ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்கின்றனர். அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் சென்னை திரும்பும் போதும் இதே பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு தாம்பரம் செங்கல்பட்டு வரையிலான சாலையில் அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உயர்மட்ட பாலம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை தயார் செய்து கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். மத்திய அரசு இதனை விரைவில் செயல்படுத்தினால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version